ஸ்ரீ மீனாட்சி அம்மன் தேவஸ்தானம்

          மேற்படி ஆலயத்தின் பரிபலனசபையல் ஆலயத்திற்கென தேர் அமமைக்கும் முகமாக தேர் திருப்பணி சபை ஒன்றை அம்மைக்க எண்ணி “ஸ்ரீ மீனாட்சி அம்மன் தேர் திருப்பணி சபை “ என்ற பெயரில் இயங்குவதற்கான நிர்வாக சபை ஒன்றை தெரிவு செய்வதற்காக 26.09.2012 (புதன்கிழமை ) மலை 5.25 மணியளவில் ஆலய பரிபலனசபைத் தலைவர் திரு செ. பூவிபலசிங்கம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது .

246451_473505449346707_1429561003_n

                                            

 

 

 

 

 

 

 

 

அதன்படி தேர் திருப்பணி சபை அங்கத்தவர்களாக அதற்குரிய பட்டியலில் இடப்பட்டோர் (அங்கத்தவர்கள்) தெரிவு செய்யப்பட்டனர்.

அதனை தொடர்ந்தது நடைபெற்ற தேர் திருப்பணி சபை கூட்டத்தில் தேர் செய்வதற்கான இடம் பற்றி ஆராயப்பட்டபோது திரு.க.பாலசுந்தரம் அவர்களால் தற்காலிகமாக இடம் தருவதாக கூறினார்.  தொடர்ந்து தேர் செய்வதற்கு திரு,கலாமோகன் அவர்களை கொண்டு உருவாக்குவதென சபையின் அங்கீகாரம் பெறப்பட்டு ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அடுத்து நடைபெற்ற கூட்டத்தில் தேர் சிற்பச்சரி  திரு.கலாமோகன் அவர்களை அழைத்து புதிய சித்திர தேரின் அளவுப்பிரமணாம் தொடர்பாக ஆராயப்பட்டது அதற்கு சிறந்த சிற்ப வேலைகள் கொண்ட எண்கோண   வடிவிலான தேர் செய்துதருவதகவும் ஆலயமூலஸ்தான அளவுகளின் பிரகாரம் தேரினுடைய உயரம் 22’9”(இருபத்தி இரண்டு அடி ஒன்பது இஞ்சி ) அகலம் 12’9”(பன்னிரண்டு அடி ஒன்பது இஞ்சி) என்றும் புதியதொரு தொழில்நுட்பத்தில் அமையப்பெறும் என்றும் கூறினார்  அதன் பிரகாரம் மரம் தந்து தேர் அமைப்பதற்கு உரிய முழு மூலதனம்மாக அண்ணளவாக ரூபா 7,000,000/=(எழுபது இலட்சம் )   என்று கேட்டபோது  அதற்க்கு சபையும் இணக்கம் தெரிவித்துக்கொண்டது.

அதன்பின் இரும்பு வேலைகள், மரங்கள் , வர்ணப்பூச்சு , தேர் அமைப்பதற்குரிய தற்காலிக இருப்பிடம் அமைப்பதற்குரிய செலவு உட்பட அண்ணளவாக 115,000,000/=(ஒருகோடியே பதினைத்துலட்சம்) செலவாகும் என ஆலோசிக்கப்பட்டது.

அதன் பின்னர் தேர் வேலைக்குரிய மருது  மரங்கள் 30/11/2012 பூநகரியில் இருந்தது கொண்டுவரப்பட்டது ஏனைய மரங்கள் சில அம்பாள் அடியவர்களால் தேர் திருப்பணிக்கு என நன்கொடையாக வழங்கப்படது

அதன் பின்   தேர் திருப்பணிக்குரிய நாள் வேலை 03/12/2012 மதியம் பூசையுடன் தேர் திருப்பணி சபை தாலைவர் மற்றும் நிர்வகசபையினர், உறுப்பினர்கள் மற்றும் ஆலயபரிபலனசபையினர்  முன்னிலையில்  சிற்பச்சரி திரு. கலாமோகன் அவர்களால் தொடக்கி வைக்கப்பட்டது அதன் பின் அவரது  தொழிலாளர்களும்  தொடக்கி வைக்கப்பட்டது அதன் பின் தலைவருடைய தெட்சனை  வழங்கல் நிகழ்வுடன் நிறைவேறியது

அதன் பின் தேர் திருப்பணி வேலைக்குரிய தற்காலிக இடத்தில் தேர் வேலைக்குரிய கொட்டகை தூண் நிறுவப்பட்டது அதன் பின்னர்  தேர் திருப்பணி சபையினர், ஆலயபரிபலனசபையினர் மற்றும் இளைஞர்கள் உதவியுடன் தேர் கொட்டகை முடிவுற்றது.

 

தேருக்கு அச்சு ஏற்றும் வைபவம்.
————————————————————————

அம்பிகை அடியார்களே !

சாவகச்சேரி ,சங்கத்தானை ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆலயத்தில் நிகழும் நந்தன வருடம் தைமாதம் 14ம் நாள் (27-01-2013) ஞாயிற்றுக்கிழமை தைப்பூச நன்நாளில் பகல் 11-30 மணி முதல் 12-15 மணி வரையுள்ள புண்ணிய சுபவேளையில் எம்மால் அம்மைக்கப்படவுள்ள எண்கோண சித்திர சிற்பத்தேருக்கு

“அச்சுஏற்றும்வைபவம்”

நடைபெற அம்பிகையின் திருவருள் கைகூடியுள்ளது.

sri

 அன்றையதினம் தேருக்கு அச்சேற்றும் வைபவம் அம்பாளின் பெருங்கருனையினாலும் ஆலய பிரதமகுரு , ஆலய குரு வின் ஆசியுடன் ஆரம்பமாகி தேர் திருப்பணி சபையினர், ஆலயபரிபலனசபையினர் மற்றும் இளைஞர்கள்  உதவயுடனும் அம்பாள் அடியவர்களது ஆதரவுடனும் பக்திபூர்வமாக நிறைவேறியது

அன்றையதினம் அம்பாள் அடியவர்களது காணிக்கையாக 62,397/= கிடைக்கப்பெற்றதும்  குறிப்பிடத்தக்கது